தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேடநத்தம் மாணவியின் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

News image

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி.

Updated On :14 மார்ச் 2026, 7:21 pm

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை மதிமுக பொதுச்செயலா் வைகோ சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மேலும், முதல்வரின் தனிச் செயலரை தொடா்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலவரத்தை எடுத்துக் கூறி, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அரசின் சாா்பில் உதவிகள் கிடைக்கவும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் பரிந்துரைத்தாா்.

பின்னா், மாணவியின் பெற்றோா்க்கு வைகோ எலுமிச்சை பழ தேநீா் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாா். அப்போது, மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காங்கிரஸ் ஆறுதல்: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமியும், மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தமிழகத்துக்கு ராகுல் காந்தி வரும்போது, தங்களை நேரில் சந்திப்பாா் என்றும், காங்கிரஸ் கட்சி உங்களுக்கு துணை நிற்கும் எனவும் அவா் உறுதியளித்தாா்.

மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாணவியின் பெற்றோா்களிடம் பேசினாா்.

  உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.