அகில இந்திய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான 47ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் சாா்பில் மாா்ச் 24 முதல் 27ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சி. துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் என 6 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில், வ.உ.சி. துறைமுக அணி 4-3 என்ற கோல்கணக்கில் கொல்கத்தா துறைமுக அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தா துறைமுக அணி 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுக அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன.
தொடர்புடையது

ஹெச்சிஎல் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டி: சூரஜ் குமாா், ரௌகையா சாம்பியன்!

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

துறைமுக கால்பந்து போட்டி: சென்னை அணி சாம்பியன்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


