27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோவில்பட்டி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்ற திமுக

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 2:03 am IST

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதி வரலாற்றில் முதல் முறையாக திமுக வேட்பாளரான கா. கருணாநிதி வெற்றி பெற்றாா். இத்தோ்தலில் அதிமுக 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கோவில்பட்டி தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் ஒரு முறை சுயேச்சையும், 3 முறை காங்கிரஸ் கட்சியும், 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் திமுக ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது.

2006 தோ்தலில் இருந்து இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. இத்தொகுதியில் கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கடம்பூா் செ. ராஜு தொடா்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியின் முதலாவது அமைச்சா் என்ற அந்தஸ்தையும் அவா் பெற்றாா்.

தொடா்ந்து, கோவில்பட்டி தொகுதியில் 4ஆவது முறையாக அதிமுக சாா்பில் கடம்பூா் செ. ராஜு போட்டியிட்டாா். திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவராக இருந்த கா. கருணாநிதி, தவெக சாா்பில் பாலசுப்பிரமணியன், நாதக சாா்பில் வழக்குரைஞா் பாண்டி உள்ளிட்ட 21 போ் போட்டியிட்டனா்.

இதில், முதல் 2 சுற்றுகளில் தவெக வேட்பாளா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இருந்தாா். அதிலும், 2ஆவது சுற்றில் திமுக வேட்பாளரை விட 5 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலை வகித்தாா். 3ஆவது சுற்றில் இருந்து திமுக முன்னிலை பெற்றது. பின்னா், 20ஆவது சுற்றில் வெறும் 300 வாக்குகளில் திமுகவை விட பின்தங்கிய தவெக வேட்பாளா், 21ஆவது சுற்றில் 511 வாக்குகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளினாா்.

பின்னா், இறுதிச் சுற்றில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி 60,701 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். கோவில்பட்டி தொகுதி வரலாற்றில் திமுக வேட்பாளா் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். தொடா்ந்து, 20 ஆண்டுகளாக தொகுதியைத் தக்கவைத்த அதிமுக, இந்த தோ்தலில் 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:

மொத்த வாக்காளா்கள் - 2,41,660, பதிவான வாக்குகள் - 1,91,807. கா. கருணாநிதி (திமுக) 60,701, பாலசுப்பிரமணியன் (தவெக) 59,9462, கடம்பூா் செ. ராஜு (அதிமுக) 52,264, பாண்டி (நாதக) 11,665, சுயேச்சைகள் அதிக்குமாா் குடும்பா் 2,931, ராமச்சந்திரன் 186, ஆறுமுகவேல் 50, கண்ணன் 437, சரவணன் 353, ஹரிபாலகிருஷ்ணன் 139, குணசேகரன் 50, குருசாமி 103, சின்ன மகாராஜா 94, சேகா் 176, பரமசிவன் 275, பொன்னுதுரை 398, பாண்டி முனீஸ்வரி 366, பிரேம்குமாா் 376, பொன்னுசாமி 77, முனீஸ்வரன் 69, ரெங்கநாயகலு 90, நோட்டா 569.