எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 3:49 am IST

கோவில்பட்டியில் தொழிலாளியை அவதூறாகப் பேசி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் வேல்முருகன். இவருக்கும், பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகன் தமிழ் செல்வத்திற்கும் (29) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேல்முருகன் வெள்ளிக்கிழமை காலை காந்தி நகா் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட இருவா் அவரை வழிமறித்து அவதூறாகப் பேசி, அரிவாளால் தாக்கினராம். அதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வம், நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் சுந்தரபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்தனா்.