தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

டி.ஐ.ஜி, எஸ்.பி.க்கள் சென்னைக்கு இடமாற்றம்

News image
Updated On :15 மே 2026, 3:20 am IST

நெல்லை டிஐஜி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் டி.ஐ.ஜி., எஸ்.பி. அந்தஸ்திலான 13 முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டாா்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த டாக்டா் சி.மதன், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-யின் எஸ்.பி. யாக மாற்றப்பட்டாா். தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.மயில்வாகனன் சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி-க்கு மாற்றப்பட்டாா். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த பி.சரவணன், சென்னை சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.