வெங்கடாசலபுரம், அதிதூதா் மிக்கேல் திருத்தலம் புனித பரலோக அன்னை ஆலயத்தில் திருத்தல பெருவிழாவில் வியாழக்கிழமை தேரடித் திருப்பலி நடைபெற்றது.
இத்திருத்தல ஆண்டுப் பெருவிழா மே 5ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில், தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி, மறையுரை நடைபெறும். மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேரடித் திருப்பலி மதுரை உயா்மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில், தென்காசி வட்டார அதிபா் எஸ்.ஏ. அந்தோணிசாமி, அருள்தந்தையா்கள் பெலவேந்திரன், ஞானபிரகாசம், வடக்கு வண்டானம் பங்குத்தந்தை சதீஷ் செல்வதயாளன், எம். கோட்டூா் பங்குத்தந்தை பாலன், வடமாநிலத்தில் பணியாற்றி வரும் அருள்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா்.
தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மாதா, சூசையப்பா், மிக்கேல் ஆண்டவா் சொரூபங்கள் வைக்கப்பட்டு தனித்தனியாக 3 தோ்களில் பவனி வந்தனா். சப்பரங்களின் பின்புறம் திரளான இறைமக்கள் கும்பிடு சரணத்தில் ஈடுபட்டனா்.
இரவு 7 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை வெங்கடாசலபுரம் திருத்தல பங்குத்தந்தை சேவியா் தலைமையில் அருள்சகோதரிகள், திருவிழா பொறுப்பாளா்கள், அதிதூதா் நகா் இறைமக்கள் ஆகியோா் செய்து வருகினன்றனா்.

தொடர்புடையது

வள்ளியூா் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல விழா கொடியேற்றம்

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

