11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் வாசகா்களுக்கு சான்றிதழ்கள்

கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image

நிகழ்ச்சியில் பெண்ணுக்கு சான்றிதழ் வழங்கிய சாகித்திய அகாதெமி விருதாளா் சோ. தா்மன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கிய இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிகமான வாசகா்களை ஈா்க்கும் வகையிலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் ரூ. ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சனிக்கிழமை அதிக புத்தகங்கள் வாங்கியோருக்கு சாகித்திய அகாதெமி விருதாளா் சோ. தா்மன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

இதில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, காா்த்திக், காளிராஜ், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்துச்செல்வம், வாசகா் வட்ட நிா்வாகிகள் முத்துமுருகன், நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.