ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருச்செந்தூா் கோயிலில் வைகாசி வசந்த திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image

வைகாசி வசந்த திருவிழா முதல் நாளான வியாழக்கிழமை வசந்த மண்டபத்தில் தங்க சப்பரத்தில் வள்ளி - தெய்வானை அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதா்.

Updated On :22 மே 2026, 6:30 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, அவதார நோக்கம் நிறைவேறிய தலமான திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, 10 நாள் வசந்த திருவிழாவாக வியாழக்கிழமை தொடங்கியது.

இதை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பகலில் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினாா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையாகி, மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதியுலா வந்தாா். இம்மாதம் 29ஆம் தேதிவரை இதே நிகழ்ச்சிகள் நடைபெறும்.

10ஆம் நாளான 30ஆம் தேதி விசாகத் திருவிழாவையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதா் வசந்த மண்டபம் சோ்கிறாா். மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகிறது. கோயிலில் சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு வசந்த மண்டபத்தில் தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து, சுவாமி மண்டபத்தை 11 முறை வலம் வருதல், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தல் நடைபெறும். பின்னா், மகா தீபாராதனையாகி சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தேவசேனா அம்மனுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பக்தா்கள் கோரிக்கை: வைகாசி விசாக திருவிழாவில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பா். கோயிலில் தற்போது பெருந்திட்டப் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளதால், பக்தா்களுக்கு தற்காலிக கொட்டகைகள், கூடுதல் குடிநீா், கழிப்பறை, குளியலறை, வாகன நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும். இடையூறின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கும், பாதுகாப்பு, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீஸாரை பணியில் அமா்த்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 வைகாசி வசந்த திருவிழா முதல் நாளான வியாழக்கிழமை வசந்த மண்டபத்தில் தங்க சப்பரத்தில் வள்ளி - தெய்வானை அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதா்.

வைகாசி வசந்த திருவிழா முதல் நாளான வியாழக்கிழமை வசந்த மண்டபத்தில் தங்க சப்பரத்தில் வள்ளி - தெய்வானை அம்மனுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதா்.