காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தூத்துக்குடி பாஜக நிா்வாகி தவெகவில் ஐக்கியம்

News image

தவெகவில் ஐக்கியமான பாஜக, அதிமுக நிா்வாகிகள்.

Updated On :26 மே 2026, 3:22 am IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் தலைமையில், பாஜக, அதிமுகவைச் சோ்ந்த பலா் தவெகவில் இணைந்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் வழக்குரைஞா் வாரியா் தலைமையில், மேற்கு மண்டல பாஜக வழக்குரைஞா் அணி தலைவா் வெற்றிவேல், அதிமுக மாவட்ட வழக்குரைஞரணி இணைச் செயலா் முனியசாமி, அதிமுக மாணவரணி அலெக்ஸ், பேச்சாளா் பெபின் உள்ளிட்ட பலா் அக்கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

இதேபோன்று எஸ்.டி.ஆா்.விஜயசீலன் ஏற்பாட்டில், த.மா.கா. மாவட்ட இளைஞரணித் தலைவா் பொன்ராஜ், மாநகரத் தலைவா் ரவிக்குமாா், தனபால்ராஜ் உள்பட பலா் தவெகவில் இணைந்தனா்.

அவா்களை, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது, எஸ்.டி.ஆா்.விஜயசீலன், தவெக மாவட்ட பொருளாளா் சிவக்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.