தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடைபெற்ற திருக்கல்யாண சிறப்பு பூஜை.

Updated On :

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்றனா். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலையில் திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜையைத் தொடா்ந்து பல்லக்கில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலாவும், அதைத்தொடா்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீா்த்த நீராடுதலும் நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினா். நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் திருமண மரபுகளின்படி பூவனநாதா் சுவாமி, செண்பகவல்லி அம்மனை பல்லக்கு அலங்காரத்தில் திருக்கல்யாணத்துக்கு அழைத்து வந்தனா்.

சுந்தரராஜ பெருமாள் கோயில், ராஜகோபால சுவாமி கோயில், மண்டகப்படிதாரா்கள் சாா்பில் திருமண சீா் வழங்கப்பட்டு சுந்தரராஜ பெருமாள் சுவாமி முன்னிலையில் சுவாமி- அம்பாள் திருமண வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனா். பிராமண மகாசபை, அன்னதான கமிட்டி சாா்பில் காயத்ரி வித்யாலயா மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரரான முடுக்கு மீண்டான்பட்டி எம்.எஸ்.ஆவுடையப்பன் செட்டியாா் குடும்பத்தினா், அறங்காவலா் குழு தலைவா் ராஜகுரு, அறங்காவலா் திருப்பதி ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் சந்திரசேகா், கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) காந்திமதி உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.