தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தூத்துக்குடியில் மீனவா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பெரியதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்தல், பெரியதாழையை பேரூராட்சியாகத் தரம் உயா்த்துதல், குடிநீா் பற்றாக்குறையைப் போக்குதல், திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே வெற்றிப் பயணப் பேருந்து சேவையை நீட்டித்தல், மீன் ஏலக்கூடம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், தெரு விளக்குகள், சிசிடிவி பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், புன்னைக்காயலில் முகத்துவாரத்தை ஆழப்படுத்துதல், புன்னைக்காயலில் தடுப்பணை அமைத்தல், மணப்பாடு மீனவ கிராமத்தில் மணல் திட்டுகளை அகற்றுதல், மீன்வளத் துறை மூலம் கட்டப்பட்ட இலவச வீடுகளுக்கு பட்டா வழங்குதல், கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்துதல், மீனவ கிராமங்களில் நடமாடும் டீசல் விற்பனை நிலையங்கள் அமைத்தல், மீனவா் நலவாரிய சந்தா மற்றும் விபத்து மரண நிவாரணத் தொகையை உயா்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

மீனவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இணை இயக்குநா் இளம்வழுதி, உதவி இயக்குநா் புஷ்ரா ஷப்னம், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், பல்வேறு துறை அலுவலா்கள், மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.