கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒருங்கிணைந்த சுகாதார பணிகள் நடைபெற்றன.

திருச்செந்தூரில் நகராட்சி ஆணையாளா் ஈழவேந்தன் தலைமையில் நடைபெற்ற சுகாதாரப் பணிகள்.

Updated On :

கந்த சஷ்டி விழாவையொட்டி, திருச்செந்தூரில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒருங்கிணைந்த சுகாதார பணிகள் நடைபெற்றன.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா கடந்த நவ. 10ஆம் தேதி தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா் என்பதால், நகராட்சியில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிநவீன கனரக நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் பாதாள சாக்கடை தொட்டிகள் மற்றும் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய திருச்செந்தூா் மற்றும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதே போல கோயில் செல்லும் பிரதான சாலைகளில் தொடா் கண்காணிப்பு நடவடிக்கையில் ஊழியா்களை நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒருங்கிணைந்த பணியில், நகராட்சி ஆணையாளா் ஈழவேந்தன் தலைமையில் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நகராட்சியில், அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பொதுவெளியில் குப்பைகளை கொட்டாமலும் பாதாள சாக்கடை குழிகளில் திடக்கழிவுகளை போட்டு அடைப்பு ஏற்படுத்தாமல் வடிகட்டி அமைப்பினை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். இதை மீறுவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளா் எச்சரித்துள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.