ஆத்தூா் கோயிலில் சுவாமி திருக்க ல்யாணம்

ஆத்தூரில் சோமநாத சுவாமி கோயி­லில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்ததை தொடா்ந்து திங்கள்கிழமை இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாள்.

Updated On :

ஆத்தூரில் சோமநாத சுவாமி கோயி­லில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்ததை தொடா்ந்து திங்கள்கிழமை இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக காலை தெய்வானை அம்பாள் ஆத்தூா் வடக்கு ரதவீதியில் உள்ள நல்ல பிள்ளையாா் கோயிலுக்கு தவசு காட்சிக்கு எழுந்தருளினாா். மாலையில் சுப்ரமணியா் மயில் வாகனத்தில் புறப்பாடு, பின்னா் அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றன. இரவில் சோமநாத சுவாமி கோயி­லில் சுப்பிரமணியா், தெய்வானை திருக்கல்யாணமும், பட்டணப் பிரவேசமும் நடைபெற்றன. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள், ஆத்தூா் வியாபாரிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.