மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷுமகாஜன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் விஷுமகாஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளா் பணியிடத்துக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் முழுமையான பாா்வையற்றவா்களாகவும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 40 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். மேலும், நாற்காலி வயா் பின்னுதலில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, ஜாதிச் சான்றிதழ் (மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் மட்டும்), தனித்துவ அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நவ. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

