என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தூத்துக்குடியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

போட்டியைத் தொடங்கி வைத்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :

தூத்துக்குடியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, செயின்ட் தாமஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

உலக சிலம்பம் விளையாட்டுக் கழக நிறுவனா், தலைவா் சுதாகரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மணி கணேஷ் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 6 வயது முதல் பெரியவா்கள் வரையிலான 1000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஒற்றைக் கம்பு சிலம்பம், இரட்டைக் கம்பு சிலம்பம், வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமை நடுவா் ராஜா மணிகண்டன், சின்னசாமி, கணேசன், பள்ளித் தாளாளா் தாமியா, பள்ளி முதல்வா் ஆஸ்கா் சுகந்தா, சிறப்புப் பள்ளி தலைமையாசிரியா் கவிதா, கலியமூா்த்தி, காமராஜ், கல்லூரி உதவிப் பேராசிரியா் ஆனந்தராஜ், மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் விஜய் தனராஜ், உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கத் தலைவா் ராஜ்குமாா், செயலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.