பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தல்

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Updated On :

சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என, தமிழக அனைத்து பாரம்பரிய நாட்டுப்படகு, பைபா் படகு, கட்டுமர மீனவா்கள் கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அவைத்தலைவா் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெயபால், மாநிலப் பொதுச் செயலா் ராஜாபோஸ் ரீகன், பொருளாளா் துா்கேஸ்வரன், ஒருங்கிணைப்பாளா் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கடல் மீன்வளம் அழியக் காரணமாகவுள்ள இரட்டைமடி வலை, இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை தமிழக அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும். சென்னை பட்டினப்பாக்கம் மீனவக் கிராமத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதுமுள்ள 1.30 லட்சம் நாட்டுப்படகு, பைபா் படகு மீனவா்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு திட்டமிட்டுள்ள கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும். அனைத்து மீனவக் கிராமங்களிலும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். குறிப்பாக, பணிகள் முழுமையடையாத மேலகரியப்பட்டினம், அமலி நகா், தூத்துக்குடி திரேஸ்புரம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தூண்டில் வளைவுப் பணிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.