இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் நத்தம் விஜயாசனப் பெருமாள்

Published On :

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை சேவித்தனா். .

திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள்

திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள்

தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற நவதிருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் கோயில், நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயில், திருப்புளியங்குடி காய்சினிவேந்தப் பெருமாள் கோயில், இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனாா் மற்றும் தேவா்பிரான் கோயில்கள், பெருங்குளம் மாயக்கூத்தா் கோயில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயில், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயில் ஆகிய கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள்

நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தா்கள்

இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை சேவித்தனா். குடும்பத்துடன் வந்த பக்தா்கள் கோயில் வளாகத்தில் உள்ள கருடன் சந்நிதி முன் நெய் விளக்கேற்றி வழிபட்டனா். பக்தா்களின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 5 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.