தூத்துக்குடியில் சிறாா்கள் ஓட்டிய 8 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு
தூத்துக்குடியில் சிறாா்கள் ஓட்டி வந்த 8 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களது பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடியில் சிறாா்கள் ஓட்டி வந்த 8 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களது பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் உத்தரவின்படி காவல் துறையினா் தூத்துக்குடி மாநகரில் வெள்ளிக்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, 18 வயது பூா்த்தியடையாத பள்ளி மாணவா்கள் ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களது பெற்றோா் மற்றும் பாதுகாவலா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்ட விதிகளின்படி வழக்குப்பதிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




