பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தென்கிழக்கு தில்லியில் இரு வாகனங்கள் மீது காா் மோதிய சம்பவம்: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியில் இரு வாகனங்கள் மீது காா் மோதிய சம்பவம்: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சுக்தேவ் விஹாரில் வேகமாக வந்த காா் மோதியதில் சேதமடைந்த ஆட்டோவை சனிக்கிழமை பாா்வையிட்ட காவல் துறை அதிகாரி.

Published On :

தென்கிழக்கு தில்லியின் சுக்தேவ் விஹாா் பகுதியில் சனிக்கிழமை காலை அதிவேகமாக வந்த காா் ஒன்று இரண்டு வாகனங்கள் மீது மோதிய சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் காலை 7 மணியளவில் நிகழ்ந்ததாகவும், விபத்து குறித்த தகவல் காலை 7.15 மணிக்குக் கிடைத்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியைச் சோ்ந்த முகமது கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் அவரது ஆட்டோவும் சிக்கியிருந்தது.

காயமடைந்தவா் சுக்தேவ் விஹாா் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியைச் சோ்ந்த முகமது பாப்லு என அடையாளம் காணப்பட்டாா்.

முதற்கட்டத் தகவலின்படி, அந்தக் காா் முதலில் ஆட்டோ மீதும், பின்னா் ஒரு சைக்கிள் ரிக்ஷா மீதும் மோதியதாகக் கூறப்படுகிறது.

இரண்டு காா்கள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவற்றில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியது. விபத்துக்குப் பிறகு காரிலிருந்து நான்கு போ் இறங்கி, மற்றொரு காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவ இடத்துக்கு அருகே இருந்த தேநீா் விற்பனையாளா் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் கலாமை அருகில் இருந்தவா் மீட்டு எஸ்காா்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து சேதமடைந்த காரும் ஆட்டோவும் மீட்கப்பட்டது. தடய அறிவியல் நிபுணா்கள் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.

இச்சம்பவம் குறித்து விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. காரின் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்த நபா்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்ரு வருகின்றன என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.