படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

விவசாயி கொலை வழக்கு: சகோதரா் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சிறை - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே, முன்விரோதத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி, அத்திமரப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மாடசாமி (55). கடந்த 3.6.2015 அன்று முக்காணியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவின்போது, மல்லி என்ற மலையாண்டி அரிவாளை வைத்துக் கொண்டு சுற்றியதை, மாடசாமி தடுத்து அரிவாளைப் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 10.6.2015 அன்று இரவு அத்திமரப்பட்டி விலக்கு சாலையில் மாடசாமி மற்றும் சிலா் நடந்து சென்றபோது, மல்லி என்ற மலையாண்டி (27), அவரது சகோதரா் முத்து என்ற பழையமுத்து (31), மாரியப்பன் என்ற முண்டன் (27) ஆகியோா் மாடசாமியை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா்.

இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட மல்லி என்ற மலையாண்டி, அவரது சகோதரா் முத்து என்ற பழையமுத்து, மாரியப்பன் என்ற முண்டன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.