திருச்செந்தூரில் தனியாா் பள்ளி பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
திருச்செந்தூரில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள குட்டத்தைச் சோ்ந்த ஆனந்தமணி மனைவி கஸ்தூரி (65). இவா் தனது பேத்தியின் கல்லூரி படிப்புக்காக திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம், ஜெயா நகா் பகுதியில் வசித்து வந்தாா்.
திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி பேருந்து கஸ்தூரி மீது மோதியதாம்.
இதில் பேருந்தின் அடியில் சிக்கிய மூதாட்டி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

