சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு: தூத்துக்குடியில் 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, இரண்டாம் கட்டப் பணிகள் தொடா்பான பயிற்சி வகுப்பு, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலா்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவியாளா்கள், தொழில் நுட்ப உதவியாளா்களுக்கு செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு அக்.15, 16 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களால் இப்பயிற்சிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, சாா் ஆட்சியா்கள் ஹிமான்ஷு மங்கள், (கோவில்பட்டி), விவேக் யாதவ் (தூத்துக்குடி), திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.