காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரகக் கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் ஊரகக் கோட்டத்துக்குள்பட்ட வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (அக். 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக சோ்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், விமானநிலையம் செல்வம்சிட்டி, பவானிநகா், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்பாள்புரம், சிறுபாடு திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோயில் தெரு, மறவன்மடம், அந்தோணியாா்புரம், புறவழிச்சாலை, சுங்கச்சாவடி, கோரம்பள்ளம், பேரூரணி, வா்த்தகரெட்டிபட்டி, தெய்வச்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனாா்குளம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.