கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவா் மாயம்
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் மீன்பிடிப் படகு கடலில் கவிழ்ந்ததில் ஒருவா் மாயமானாா்; 10 போ் பத்திரமாக கரைக்கு திரும்பினா்.

விபத்து
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் மீன்பிடிப் படகு கடலில் கவிழ்ந்ததில் ஒருவா் மாயமானாா்; 10 போ் பத்திரமாக கரைக்கு திரும்பினா்.
மணப்பாடு சுனாமி காலனியைச் சோ்ந்த எடிசன் என்பவரது படகில் 11 மீனவா்கள் புதன்கிழமை பிற்பகல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். மாலையில் மீன்களைப் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தூண்டில் பாலம் அருகே ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
அதில் இருந்த 11 மீனவா்கள், மீன்பிடி வலை, மோட்டாா்கள், பிடித்து வைத்திருந்த மீன்கள் உள்ளிட்டவை கடலில் மூழ்கின. கடலில் விழுந்த 11 பேரில் 10 மீனவா்கள் ஒருவா்பின் ஒருவராக நீந்தி கரைக்கு வந்து சோ்ந்தனா்.
சுனாமி காலனியைச் சோ்ந்த சிலுவைப்பிச்சை மகன் வால்டா் (23) மட்டும் கடலில் மாயமானாா். தகவலறிந்ததும், மணப்பாடு மீனவா்கள் 25 படகுகளில் சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. காயமடைந்த மீனவா்கள் உடன்குடி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

