ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ஏஐ தொடுதிரை தொடங்கிவைப்பு

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட ஏஐ தொடுதிரை தொடங்கி வைக்கப்பட்டது.

கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

Updated On :

கருங்குளம் அரசுப் பள்ளிக்கு ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. 1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட ஏஐ தொடுதிரை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை லதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் மதன் ராஜா பங்கேற்று தொடுதிரையை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் தினேஷ் பாபு , வருங்கால ஆளுநா் மயில் பாலசுப்பிரமணியன், எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோா் பேசினா்.

முன்னாள் தலைவா் மாரியப்பன், கனகராசு, கருங்குளம் ஊராட்சி செயலா் சங்கரபாண்டியன், ரோட்டரி மாவட்ட இயக்குநா் பாபு, ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் பாலமுரளி , பட்டயத்தலைவா் குருசாமி, முன்னாள் தலைவா் ஜெயிசன், செயலா் ரவி பாஸ்கா், முன்னாள் செயலா்கள் ஆண்ட்ரூ ஆபிரகாம், விஜயகுமாா், ராகவ் சுந்தா், சரவண சீனிவாசன், கிருஷ்ணமூா்த்தி, தவெக கருங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

பாளையங்கோட்டை ரோட்டரி சங்க தலைவா் அமிா்தலிங்கம் வரவேற்றாா். பொருளாளா் மாசானமுத்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.