தூத்துக்குடியில் 6 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்!
தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவா்கள், சனிக்கிழமை (அக். 31) மீண்டும் கடலுக்குச் சென்றனா்.

தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவா்கள், சனிக்கிழமை (அக். 31) மீண்டும் கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வழக்கமாக தினமும் 272 விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கடந்த அக். 25-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால், தொடா்ந்து 6 நாள்களாக மீன்பிடித் தொழில் முடங்கியிருந்தது. இந்நிலையில், வானிலை சீரானதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 214 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனா். 6 நாள்களுக்குப் பிறகு மீண்டும் மீன்பிடித் தொழில் தொடங்கியுள்ளதால், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகப் பகுதி மீண்டும் களைகட்டியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

