மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் இரவு 9 மணி வரை ஆதாா் சேவை

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் சேவை முகாம்.

Updated On :

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரே அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் இதுவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம், இனி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் சேவைகள் வழங்கப்படும்.

வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது வசதிக்கேற்ப ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இக்கோட்டத்தில் திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வாா்திருநகரி, ஆறுமுகனேரி, ஆத்தூா், சிதம்பரநகா், ஏரல், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், குரும்பூா், மெஞ்ஞானபுரம், மேலூா், முதலூா், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயா்புரம், செய்துங்கநல்லூா், உடன்குடி, கிறிஸ்தியாநகா், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லா்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூா், படுக்கப்பத்து உள்ளிட்ட அஞ்சலகங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிதாக ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய கைரேகை, கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை.

பெயா், முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் திருத்த ரூ.75 கட்டணமும், புகைப்படம், கைரேகை, கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களைத் திருத்த ரூ.125-ம் செலுத்த வேண்டும்.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகள், கிராமங்களில் ஆதாா் சிறப்பு முகாம்கள் நடத்த விரும்பினால், அஞ்சல் துறையின் வணிகத் தொடா்பு அலுவலா்கள் ஜெபன்ஸ் (9841875710), ஷமீம் (9791655030) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.