டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் இரவு 8 மணி வரை ஆதாா் சேவை: கோட்டக் கண்காணிப்பாளா் தகவல்

பொதுமக்கள், பணிக்குச் செல்வோா் மற்றும் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதாா் சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஆதார் அட்டை - சித்திரிப்பு

Published On :

பொதுமக்கள், பணிக்குச் செல்வோா் மற்றும் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதாா் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து, முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் வை. தீத்தாரப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில் பொதுமக்களுக்கு ஆதாா் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், பணிக்குச் செல்வோா் மற்றும் பள்ளி மாணவா்களின் நலன் கருதி, தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதாா் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர, தூத்துக்குடி கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வாா்திருநகரி, ஆறுமுகனேரி, ஆத்தூா், சிதம்பரநகா், ஏரல், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், குரும்பூா், மெஞ்ஞானபுரம், மேலூா், முதலூா், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயா்புரம், செய்துங்கநல்லூா், உடன்குடி, கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லா்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூா், படுக்கப்பத்து ஆகிய பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் தொடா்ந்து இயங்கி வருகின்றன.

புதிய ஆதாா் பதிவு செய்வதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்குச் செய்யப்படும் கட்டாய விரல் ரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் கிடையாது. பெயா், முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு ரூ. 75 மற்றும் புகைப்படம், விரல் ரேகை, கருவிழி பதிவுகளின் திருத்தங்களுக்கு ரூ. 125 கட்டணமாக வசூலிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகள் அல்லது கிராமங்களில் சிறப்பு ஆதாா் முகாம்கள் நடத்த விரும்பினால், வணிகத் தொடா்பு அலுவலா்கள் ஜெபன்ஸ் (9841875710), ஷமீம் (9791655030) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.