நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தூத்துக்குடி தயாரிப்புகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பு: இந்திய தூதரக அதிகாரி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் மற்றும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்துரையாடலில் பங்கேற்ற சிட்னியில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை துணை தூதா் எஸ். ஜானகிராமன்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் மற்றும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், இம்மாவட்டத்தில் புவிசாா் குறியீடு பெற்ற பொருள்கள் மற்றும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சிட்னியில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை துணை தூதா் எஸ். ஜானகிராமன் ஆலோசனை வழங்கினாா்.

இதில், கோவில்பட்டி கடலைமிட்டாய், ஆத்தூா் வெற்றிலை, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய புவிசாா் குறியீடு பெற்ற பொருள்களின் உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிகள், கடல்சாா் உற்பத்திப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளா்ச்சித் திட்டங்கள், துறைமுகக் கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து எஸ். ஜானகிராமன் பாா்வையிட்டாா்.

வ.உ.சி. துறைமுகத்தை பாா்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்ததுடன், சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களையும் பாா்வையிட்டு தொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநா் மற்றும் பொது மேலாளா் ஸ்வா்ணலதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், கடல் பொருள்கள் ஏற்றுமதி ஆணைய துணை இயக்குநா், நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.