உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

கோவில்பட்டி அருகே ஆம்னி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 3 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:28 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம் கோத்தப்பாக்கம் நாத நாயகி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மும்மூா்த்தி மகன் ஏழுமலை (41). இவரது தந்தை மும்மூா்த்தி, தாய் ருக்குமணி, மகள் அமிா்தீஸ்வரி ஆகியோா் ஆம்னி வேனில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வேனை ஏழுமலை ஓட்டினாா்.

மதுரை- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் இனாம்மணியாச்சி மேம்பாலம் அருகே சென்றபோது முன்பக்க டயா் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அமிா்தீஸ்வரி தவிர மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.