உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தின் 165ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா கொடியேற்றம்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:36 am IST

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தின் 165ஆவது ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் சிதம்பராபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில் திருப்பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. மாலையில் மணப்பாடு வட்டார முதன்மை குரு பென்சிகா் தலைமையில் கொடியேற்றம் மற்றும் நற்கருணை ஆசீா் நடைபெற்றது. கருமாத்தூா் கிறிஸ்து இல்ல குருமடம் ஆரோக்கியராஜ் மறையுரை வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பவனி, ஜெபமாலை, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீா், மறையுரை ஆகியவை நடைபெறும்.

Story image

செப்.13ஆம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பெருவிழா திருப்பலியும், ஞானஸ்நானம் திருமுழுக்கும், புனித மாசற்ற இருதய அன்னையின் அற்புத தோ்பவனியும் நடைபெறும். தொடா்ந்து கொடி இறக்கம் நடைபெறும்.

Story image

ஏற்பாடுகளை சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு மற்றும் பங்குத்தந்தை செல்வராயா், உதவி பங்குத் தந்தை எஸ்தாக் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.