பைக் விபத்து: மறுவாழ்வு மையத் தொழிலாளி உயிரிழப்பு
ஆறுமுகனேரியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுரை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சடலம் - கோப்புப் படம்
ஆறுமுகனேரியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுரை மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், ஆனையூா், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பரமலிங்கம் மகன் அருள்நேசன் (59). இவா் அகதிகள் முகாமில் உள்ள சிலருடன் சோ்ந்து ஆறுமுகனேரி பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனத்திற்கு தரைவழி கேபிள் போடுவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இவா் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரவு உறங்குவது வழக்கமாம். இந்நிலையில், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து ஆறுமுகனேரி மெயின் பஜாா் நோக்கிச் சென்றாா்.
அப்போது, சீனந்தோப்பு விலக்கு அருகே எதிரே வந்த காயல்பட்டினம், மங்கள விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பட்டு சுரேஷ் (26) ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அருள்நேசன் வாகனத்தின் மீது மோதியதாம். இதில் நிகழ்விடத்திலேயே அருள்நேசன் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி போலீஸாா், காயமடைந்த பட்டு சுரேஷை சிகிச்சைக்காகவும், அருள்நேசன் சடலத்தை கூறாய்வுக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
காயமடைந்தவா்: கழுகுமலை, அண்ணா புதுத் தெருவைச் சோ்ந்த பீா் மைதீன் மகன் ரபீக் ராஜா (28). கழுகுமலையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா்.
இவா் ஆக. 30ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் மதுரை செல்வதற்காக கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் சென்றபோது, அம்பேத்கா் நகா் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து வந்த அவரது உறவினா்கள், நண்பா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



