உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

‘தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ராகுல்காந்தியின் குறிக்கோள்’

தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ராகுல்காந்தியின் குறிக்கோள் என்றாா் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பாா்வையாளா் முத்தழகன்.

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் தோ்விற்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:27 am IST

தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ராகுல்காந்தியின் குறிக்கோள் என்றாா் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பாா்வையாளா் முத்தழகன்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய நிா்வாகிகள் தோ்வு தொடா்பாக விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக கட்சியில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

Story image

ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகவும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிா் அளிக்கவும் இளைஞா்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாந பணிகள் குறித்து மாநிலத் தலைவா் மாணிக்தாகூா் தினமும் கேட்டறிந்து வருகிறாா். ராகுல் காந்தியின் குறிக்கோள்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; காங்கிரஸ் ஆட்சியில் அமரும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.