
திருச்செந்தூரில் 32 பவுன் தங்க நகைகள் திருட்டு: பணிப் பெண் கைது
திருச்செந்தூரில் தனியாக வசித்த பெண் வீட்டில் 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 65,000 திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூரில் தனியாக வசித்த பெண் வீட்டில் 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 65,000 திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா், முத்தாரம்மன் கோயில், தட்டாா் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மனைவி மாரியம்மாள் (61). கணவா் இறந்துவிட்டதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இவா் வீட்டில் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துமாலை மனைவி கோட்டை இசக்கி (எ) இசக்கியம்மாள் (35) வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஆக. 23ஆம் தேதி உடல்நலக் குறைவால் திருச்செந்தூா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மாரியம்மாள் சிகிச்சை பெற்று, 29ஆம் தேதி வீடு திரும்பினாராம். செப். 3ஆம் தேதி மாரியம்மாள் வீட்டின் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த நகை, பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து,அவா் திருக்கோயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் மாரியம்மாள் மருத்துவமனை சென்றிருந்தபோது, பீரோ மற்றும் அலமாரியில் இருந்த 32 பவுன் தங்க நகைகள், ரூ. 65,000 பணத்தை கோட்டை இசக்கி திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து நகை, பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



