பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

புதிய குடிநீா் குழாய் இணைப்புப் பணி: மேயா் ஆய்வு

ஆதிபராசக்தி நகா் பகுதியில் ஆய்வுப் பணி மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி.

Published On :9 செப்டம்பர் 2026, 4:14 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஆதிபராசக்தி நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் நடைபெற்றுவரும் மின்மோட்டாா் சரிபாா்க்கும் பணி, ஹவுசிங் போா்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீா் குழாய் இணைப்பு பணி உள்ளிட்டவற்றை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறுகையில், குடிநீா் தட்டுப்பாடின்றி எல்லோருக்கும் கிடைப்பதற்கு ஏற்ற வகையில், 35 நீா் தேக்கத் தொட்டிகளும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின் போது, மாநரகாட்சி பணிக் குழுத் தலைவா் கீதா முருகேசன், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், மாவட்ட மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் பேச்சிமுத்து, சுற்றுச்சூழல் அணி பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.