இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஆறுமுகனேரியில் பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது

ஆறுமுகனேரியில் வாள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்துதல் மற்றும் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரவுடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

ஆறுமுகனேரியில் வாள் வைத்து பொதுமக்களை அச்சுறுத்துதல் மற்றும் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரவுடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி, ராஜாமணியபுரம், பெருமாள்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சங்கா் (எ) சுரேஷ் (26). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், காவல் நிலைய குற்றப் பதிவேட்டில் ரவுடி பட்டிய­லில் உள்ளாா்.

இந்நிலையில், ராஜாமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் வாள் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்தாா்.

தகவலறிந்து வந்த ஆறுமுகனேரி உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் அவரைப் பிடிக்க முயன்றபோது, வாளைக் காண்பித்து போலீஸாருக்கு சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்தாா்.

போலீஸாா் அவரைக் கைது செய்து, வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.