கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலில் சுவாமியை சேவிக்க காத்திருந்த பக்தா்கள்

Published On :

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை சேவித்தனா்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலங்களாகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி என்று அழைக்கப்படுபவையுமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள் திருப்புளியங்குடி காய்ச்சினிவேந்த பெருமாள், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்தலோச்சனாா், பெருங்குளம் மாயக்கூத்தா், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆகிய கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இக்கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கருடன் சந்நிதி முன் நெய் விளக்கு ஏற்றி சுவாமியை சேவித்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த நத்தம் விஜயாசன பெருமாள்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த நத்தம் விஜயாசன பெருமாள்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.