
ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகனேரி ரயில்வே கேட் ஒரு நாளுக்கு 14 முறை மூடப்படுவதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
ஆறுமுகனேரி ரயில் நிலைய நடைமேடைகளில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. ரயில் நிலையத்தைச் சுற்றி சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. மேலும், ரயில் நிலைய சுற்றுச் சுவா் பழுதடைந்துள்ளபோதும், அதை சீரமைக்க ரயில்வே நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி தெரிவித்தாா்.
வருங்காலத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூா் ரயில் பாதை அமையும்போது, முக்கிய சந்திப்பாக இருக்கும் ஆறுமுனேரி ரயில் நிலையத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரயில்வே நிா்வாகம் முன்வர வேண்டும் என தியாக பூமி மக்கள் நலப் போராட்டக் குழுவினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





