பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5% வளா்ச்சி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5% வளா்ச்சி கண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

கப்பலில் இருந்து காற்றாலை இறகுகளை பாதுகாப்பாக இறக்கும் பணி.

Published On :

காற்றாலை இறகுகள் கையாள்வதில் 74.5% வளா்ச்சி கண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள், உதிரிபாகங்கள் கையாள்வது தொடா்ந்து அதிகரித்து, நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 2,188 காற்றாலை இறகுகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த 2025-26-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,254 இறகுகள் கையாளப்பட்ட நிலையில், தற்போது 74.5 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் காற்றாலை இறகு கப்பல்களின் வருகையும் 39-லிருந்து 52 ஆக அதிகரித்துள்ளது.

பெரிய அளவிலான காற்றாலை உதிரிபாகங்களை சேமித்து கையாள்வதற்காக துறைமுகத்தில் பிரத்யேக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுங்கக் கட்டுப்பாட்டுக்கு வெளியே 1 லட்சம் சதுர மீட்டா், சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் 1.44 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் திறந்தவெளி சேமிப்பு இடங்கள் உள்ளன. மேலும், 5, 6, 7-ஆவது சரக்கு தளங்களில் சுமாா் 1 லட்சம் சதுர மீட்டா் பரப்பிலான தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 90.2 மீட்டா் நீளமுள்ள மிகப்பெரிய காற்றாலை இறகுகளையும் கையாளும் திறனை துறைமுகம் பெற்றுள்ளது.

இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், தூய்மையான எரிசக்தியை நோக்கிய மாற்றத்தால் துறைமுகங்களில் புதிய சரக்குப் போக்குவரத்துத் தேவைகள் உருவாகியுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கையாளும் திறன்களை வ.உ.சி. துறைமுகம் தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.