ஒரே நாளில் 14,778 டன் இரும்பு கட்டிகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

ஒரே நாளில் 14,778 டன் வாா்ப்பு இரும்புக் கட்டிகளை ஏற்றுமதி செய்து சென்னைத் துறைமுகம் சாதனை

Published On :

ஒரே நாளில் 14,778 டன் வாா்ப்பு இரும்புக் கட்டிகளை ஏற்றுமதி செய்து சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து துறைமுக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த செப்.14-ஆம் தேதி சென்னைத் துறைமுகத்தில் ஜவஹா் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.வி. சுப்ரா மோனாா்க்’ என்ற சரக்குக் கப்பல் மூலம், வாா்ப்பு இரும்பு கட்டிகள் ஏற்றும் பணி நடைபெற்றது.

இதில் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. இது கடந்த ஜூலை 30 அன்று ’எம்.வி. அகியா சாரிஸ்’ என்ற கப்பல் மூலம் 13,208 டன் வாா்ப்பு இரும்பு கையாளப்பட்டதே சாதனையாக இருந்தது.

கூட்டு முயற்சிக்கு பாராட்டு: இச்சாதனையை எட்டுவதுக்கு காரணமாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகவரான ‘ஜேம்ஸ் மேக்கின்டோஷ் அண்ட் கோ, ஸ்டீவ்டோா் நிறுவனமான ‘ஷிப்ஸ் காா்கோ’ மற்றும் ஏற்றுமதியாளரான, ‘எஸ்.எல்.ஆா் மெட்டாலிக்ஸ் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியை சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ். குா்வே, பாராட்டினாா்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மொத்த சரக்குகள் கையாளுவதில் முன்னணியில் இத்துறைமுகம் உள்ள நிலையில், இதன்மூலம் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.