நூலகத் தந்தை சீ.ரா. அரங்கநாதன் பிறந்த நாள் விழா
புதுக்கோட்டை, ஆக. 12: இந்திய நூலக இயலின் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்த அரங்கநாதனின் பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நூலக இயலில் "கோலன்' முறையை உலகுக்கு அற


புதுக்கோட்டை, ஆக. 12: இந்திய நூலக இயலின் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்த அரங்கநாதனின் பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நூலக இயலில் "கோலன்' முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும். 1948-ல் பொது நூலகச் சட்டத்தை இயற்றிவருமான சீர்காழி ராமாமிர்த அரங்கதநாதன் 12.8.1892-ல் பிறந்தவர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர், ""நூல்கள் படிப்பதற்கே'', ""ஆளுக்கு ஒரு நூல்'', ""நூலுக்கு ஒரு ஆள்'', ""நூலகம் வளரும்'' ஆகிய நூலகத்துக்கான விதிகளை வகுத்தவர்.
சென்னை நூலகச் சங்கம், இந்திய நூலகச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றிவர். ராவ்சாகிப், பத்மஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.
புதுக்கோட்டை மாவட்ட நூலகத்தில் நடைபெற்ற இவரது பிறந்த நாள் விழாவில், அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், இரண்டாம் நிலை நூலகர் (பொறுப்பு) பா. முத்து, நுலகர்கள் எஸ். சுரேஷ், ஏ. கருப்பையா, நூல் கட்டுனர் எம். சகாயமேரி மற்றும் வாசகர்கள் பங்கேற்றனர்.
கீழையூர்: கீழையூர் ஊர்ப்புற நூலகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆர். அரங்நாதன் படத்திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டின் நூலகத் தந்தை என்று போற்றப்படும் எஸ்.ஆர். அரங்கநாதன் பிறந்தநாளை நூலகங்களில் சிறப்பாகக் கொண்டாடும்படி பொது நூலகத் துறை உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இங்கு இவ்விழா நடைபெற்றது.
விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் எம். ரங்கநாதன் தலைமை வகித்தார். பத்மஸ்ரீ எஸ்.ஆர். அரங்கநாதன் உருவ படத்தை அவர் திறந்துவைத்தார்.
வாசகர் வட்டச் செயலர் மு. கருப்பையா, பள்ளித் தலைமையாசிரியர் ம. செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசகர் வட்டத் துணைத் தலைவர் கே.ஆர்.வீ. கருப்பையா வாசகர்களுக்கான புதிய பெயர்ப் பலகையைத் திறந்துவைத்தார். ஆசிரியர்கள் ஜி. சரவணபெருமாள், ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர்கள், மாணவ - மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக வாசகர் வட்டப் பொருளர் ஆர். செல்வம் வரவேற்றார். ஆ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...