2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை 145 சமத்துவபுரங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் 23.1.2008 அன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழக ஆளுநர், பெரியார் பெயரில் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி, சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமத்துவபுரம் வீதம் 2008-09 ஆம் ஆண்டில் 29 சமத்துவபுரங்களும், 2009-10 ஆம் ஆண்டில் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக, திருப்பூர் மாவட்டம் உள்பட ஒரு மாவட்டத்திற்கு ஒரு சமத்துவபுரம் என்ற அடிப்படையில் 30 சமத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.