டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்படுமா?

பேராவூரணி,டிச.23:   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.     தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் பேராவூரணி வட்டம் அமைந்துள்ளது. இங்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:46 am

கே. கான்முகமது

பேராவூரணி,டிச.23:   தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காவல் நிலையம் மேம்படுத்தப்பட வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் பேராவூரணி வட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள காவல் நிலையத்தில்     பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப காவலர் பணியிடங்கள் உயர்த்தப்படாததால் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

28 கிராமங்களையும், 64 குக்கிராமங்களையும் உள்ளடக்கிய பேராவூரணி காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20 மட்டுமே.

   இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அரசியல் பிரமுகர்கள், மத்திய, மாநில அமைச்சர்களின் நிகழ்ச்சிகளுக்காக பாதுகாப்புப் பணிக்குச் சென்றுவிடுகின்றனர்.

  இதனால் விபத்து, தகராறுகள் நிகழ்கின்ற நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வாளர் தலைமையில் இயங்கும் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, இதுநாள் வரை பொறுப்பேற்ற ஆய்வாளர்களில் ஒருவர் கூட ஒருசில மாதங்கள் கூட பணிபுரியாமல் விடுப்பிலும், வேறு ஊர்களுக்கு பணி மாறுதலிலும் சென்று விடுகின்றனர்.

  கடந்த 6 மாதங்களாக ஆய்வாளர் பணிக்கு நிரந்தரமாக யாரும் நியமனம் செய்யப்படாமல் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்களின் பொறுப்பிலேயே பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பொறுப்பான பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது.

   கடந்த ஓராண்டில் பேராவூரணி பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளன. இதனை விசாரிக்க குற்றப்பிரிவுக்கென தனிக் காவலர்கள் இல்லை.

  காவல் நிலையம் செயல்படும் இந்தக் கட்டடம் 1950 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  இந்தக் கட்டடம் மிகவும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

 எனவே, காவல் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இதுகுறித்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.ஆர். வீரகபிலன் கூறியது:

   பேராவூரணி காவல் நிலையத்தில் கடந்த பல மாதங்களாக காவல் ஆய்வாளர் நிரந்தரமாக நியமிக்கப்படாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

   சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் தொடர்வது குறையவும் தமிழக முதல்வர் கருணாநிதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.