/

ஆலங்குடிக்கு காவிரி நீர் கிடைக்குமா?

ஆலங்குடி, ஜன. 6: ஆலங்குடியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கு காவிரி நீர் வழங்கப்படவேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆலங்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:39 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, ஜன. 6: ஆலங்குடியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கு காவிரி நீர் வழங்கப்படவேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆலங்குடி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய மேலாத்தூர் ஊராட்சியில் 1996-ம் ஆண்டு இரண்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து அங்கிருந்து ஆலங்குடி நகருக்கு குடிநீர் வழங்க அதற்கான பணிகளைத் தொடங்கினர்.

அப்போது, அந்தப் பகுதி மக்கள், ""இங்கு ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும்; மேலும், விவசாயம் பாதிக்கப்படும்'' என்று இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து,போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சுமார் 10 ஆண்டுகளில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதியைத் தொடந்து விவசாயிகள், பொதுமக்களின் போராட்டம் தாற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேலாத்தூரில் இருந்து ஆலங்குடி வரை சாலை மேம்படுத்தப்பட்டபோது, சாலையோரத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதையடுத்து, பேரூராட்சியின் சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் புதிய குழாய்களை அமைப்பதற்கான பணியைத் தொடங்கியபோது, சுற்று வட்டாரக் கிராம மக்கள், ""இங்கிருந்து ஆலங்குடிக்கு குடிநீர் அளிக்கும் காலம் முடிந்துவிட்டது, மேலும், நீட்டித்தால் இந்தப் பகுதியில் தண்ணீர் திண்டாட்டம் ஏற்படும்'' என அந்தப் பணியைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், பேச்சுவார்த்தைகளால் போராட்டம் தாற்காலிகமாக முடிவடைந்தது. இருப்பினும், அவ்வப்போது சேதமடையும் குழாய்களைச் சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சித்தால், அதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலங்குடி நகரில் 1257 வீட்டு உபயோக குடிநீர் இணைப்புகளுக்கு சுமார் 1000 பொது இணைப்புகளுக்கும் அதிகபட்சமாக இந்தத் தண்ணீரே பயன்படுகிறது.

இதனிடையே,ஆலங்குடியில் தற்போது மக்களுக்கு குடிநீóருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆலங்குடி வழியாக 706 என்னும் திட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி-அறந்தாங்கி காவிரிக் கூட்டுக்குடிநீóர்த் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டத்தில் ஆலங்குடி நகர மக்கள் பயனடையும் வகையில், இணைப்பு வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் கே.வி.எஸ். சுரேஷ் கூறியது:

""ஆலங்குடி நகரில் எந்த இடத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்தாலும், உவர்த் தன்மையுடன் தண்ணீர் கிடைப்பதுடன், அந்த ஆழ்குழாய்க் கிணற்றில் பயன்படுத்தும் சாதனங்கள் சீக்கிரமே அரிக்கப்பட்டு விரைவில் பழுதடைந்துவிடுகின்றன. இதனால், அரசின் பணம் விரயமாகிறது. பெரும்பாலும், மேலாத்தூர் தண்ணீரையே பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஆலங்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் 1996-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி மாற்று ஏற்பாடாக, இப்போது 706 திட்டத்தின் கீழ் காவிரிக் குடிநீர் வழங்கினால் ஆலங்குடிக்கு நிரந்தரமாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதுடன் மேலாத்துர் சுற்று வட்டாரத்தில் பயிர் சாகுபடியை தயக்கம் இன்றி மேற்கொள்ள வசதியாக அமையும்'' என்றார் சுரேஷ்.

வணிகர் சங்கத் தலைவர் மெ.அ. தனபால் கூறியது: ""ஆலங்குடியில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஆலங்குடியை இணைத்து அந்தத் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். மறுப்பு தெரிவித்தால், அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார் அவர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.