ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனை செயல்படுமா?
ஆலங்குடி, ஆக. 5: ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனையை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆலங்குடி பகுதியிலிருந்து சென்னை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, பழன


ஆலங்குடி, ஆக. 5: ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனையை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலங்குடி பகுதியிலிருந்து சென்னை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, பழனி, கோவை, சிவகங்கை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆலங்குடி வட்டாரத்தில் ஏராளமான நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்தப் பகுதியில் மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இல்லாததால், தற்போது இயக்கப்படும் பேருந்துகளில் அளவுக்கு அதிமாக பயணிகள் ஏறிச் செல்கின்றனர். மேலும், தனியார் பேருந்துகளில் காலை, மாலை வேளைகளில் பேருந்துகளின் மேற்கூரை, படிக்கட்டு, பக்கவாட்டு ஏணி உள்ளிட்டவற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதுபோன்ற பயணத்தின்போது, சாலையோரங்களில் உள்ள மரக் கிளைகளில் பேருந்துகள் உரசி விபத்துகுள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர். ஆலங்குடி பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கைகள் உடைந்தும், ஜன்னலில் கண்ணாடிகள் இல்லாமலும், படிக்கட்டு உடைந்த நிலையிலும் இருப்பதால், மழை நேரங்களில் பேருந்துக்குள்ளேயே குடை பிடித்துச் செல்லும் நிலையும் உள்ளது.
ஆலங்குடி பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளைப் பராமரிக்கவும், கூடுதலாக நகர் மற்றும் தொலைவிடப் பேருந்துகளை இயக்கவும் ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு போக்குவரத்து பணிமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, புதிய கட்டடத்தில் பணிமனையைத் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், ஆலங்குடியில் அரசு மருத்துமனைக்கு எதிரே வாடகைக் கட்டடத்தில் தற்காலிகமாக பணிமனை தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த இடத்திலும் பணிமனை செயல்படவில்லை.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) எஸ். ராஜசேகரன் கூறியது:
சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டமானது ஆலங்குடியில் பணிமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வகை மாற்றம் செய்வதில் காலம் தாழ்த்தப்பட்டதாக வருவாய்த் துறை அலுவலர்கள் கூறினர்.
தற்போது, கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து கேட்கப்பட்டதில் 15 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் அரசு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அதற்குரிய அமைச்சருக்குத்தான் தெரியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...