விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் ஆய்வாளர் உள்பட 8 பேர் காயம்

தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சை - திருச்சி சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வேன்கள் மோதலில் காவல் ஆய்வாளர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.    திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலப் பாதுகாப்புக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சை - திருச்சி சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வேன்கள் மோதலில் காவல் ஆய்வாளர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

   திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலப் பாதுகாப்புக்காக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவல் ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் தலைமைக் காவலர்கள் சேதுநாராயணன் (தஞ்சாவூர் ஆயுதப்படை), ராஜேந்திரன்,  முருகையன் (திருவையாறு), சீனிவாசராகவன் (திருக்காட்டுப்பள்ளி), செந்தில்குமார், தாமஸ் அலெக்ஸôண்டர் (தோகூர்), மனோகரன் (செங்கிப்பட்டி) ஆகியோர் சனிக்கிழமை காலை வேனில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வல்லம் புறவழிச்சாலை ஆலக்குடி பிரிவுச் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் ஆய்வாளர் கந்தசாமி உள்பட 8 பேரும் காயமடைந்து

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   இதுகுறித்து வல்லம் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஒலிப்பாறையைச் சேர்ந்த கண்ணதாசனை (48) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.