தஞ்சாவூர், ஜன. 8: பாப்பாநாடு அருகே தூங்கிக்கொண்டிருந்தவர் மீது எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கு விழுந்து தீக்காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள வெள்ளூரைச் சேர்ந்தவர் சின்னையன். இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாடத்தில் எரிந்துகொண்டிருந்த சிம்னி விளக்கு அவர் மீது விழுந்ததாம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சின்னையன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்
டுள்ளனர்.