தொடங்கியது இளைஞர் காங்கிரஸôர் நடைப்பயணம்

வேதாரண்யம், ஜன. 8: நாகை மாவட்டம்,வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 3 நாள்கள் மேற்கொள்ளப்படவுள்ள இளைஞர் காங்கிரஸôரின் மக்கள் சந்திப்பு, பிரசார நடைப்பயணம் சனிக்கிழமை தொடங்கியது.     வே
Updated on
1 min read

வேதாரண்யம், ஜன. 8: நாகை மாவட்டம்,வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 3 நாள்கள் மேற்கொள்ளப்படவுள்ள இளைஞர் காங்கிரஸôரின் மக்கள் சந்திப்பு, பிரசார நடைப்பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

    வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் தொடங்கிய பிரசார நடைப் பயணத்துக்கு சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஆர். விஜய் தலைமை வகித்தார். மக்களவைக்கான நாகை தொகுதி தலைவர் பி.வி.கே.பிரபு, துணைத் தலைவர் சூரியகலா செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் சந்திப்பு, பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்த மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராசேந்திரன் பேசியது:

   மகளிர் குழுக்களுக்கு நிதியுதவி, நூறு நாள் வேலை உறுதித் திட்டம், 108 அவசர மருத்துவ உதவி, இந்திரா நினைவு குடியிருப்பு, விதவைகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசுதான் கொண்டு வந்தது.

   குறிப்பாக, விவசாயிகள் பெற்றிருந்த ரூ. 70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுவரை 22 லட்சம் பேருக்கு கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு, ரூ. 8 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

    கூட்டுறவு கடைகளில் கிடைக்கும் அரிசிக்கு ஒரு கிலோவுக்கு ஏழு ரூபாயை மானியமாக அளித்து வரும் மத்திய அரசு,  நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு இந்த ஆண்டுக்கு ரூ. 47 ஆயிரம் கோடியை அளித்துள்ளது என்றார்.

    பிரசார பயணத்தில் காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் எஸ். செகநாதன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் எஸ். சிவப்பிரகாசம், முன்னாள் பேரூர் தலைவர் ஜி. சங்கரவடிவேல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என். மாரியப்பன், வி.ஆர்.கே.ரவி, சுபாஸ்சந்திரபோஸ், கருணாநிதி, கு.ப.இளம்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேத்தாக்குடி,நெய்விளக்கு, தோப்புத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்ட குழுவினர், வேதாரண்யம் நகர பகுதியில் பிரசாரம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com