கரூர், ஜன. 8: கரூர் செல்லாண்டிப்பாளையத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் தோட்டக்கலை இடுபொருள்கள் விநியோக முனைப்பு இயக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.
தோட்டக்கலைத் துறை மூலம் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவதற்காக அவர்களைத் தேர்வு செய்து பயனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான தேர்வு முகாம் கரூர் அருகேயுள்ள செல்லாண்டிப்பாளையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் லூ. சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார்.
வட்டார தோட்டக்கலை அலுவலர் ஆ. நடராஜன் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மத்திய, மாநில திட்டப் பணிகள் குறித்து விளக்கினார்.
பள்ளபாளையம் ஊராட்சித் தலைவர் ஜி. கோவிந்தராஜ் முன்னிலை வகித்து, விவசாயிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினார். துணை தோட்டக்கலை அலுவலர் ஜானகி, நுன்னீர் பாசனம் அமைக்க 65 சத மானியம் வழங்கப்படும் விவரத்தைக் கூறி, நுன்னீர் பாசனம் அமைப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.
இதில், மஞ்சள் சாகுபடி செய்யும் ஏராளமான விவசாயிகளுக்கு பயனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் பி.ஒ. சுமதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.