"இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்'
கரூர், ஜன. 8: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலர் ஆ. பாடலீஸ்வரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


கரூர், ஜன. 8: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலர் ஆ. பாடலீஸ்வரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வலியுறுத்தி டிட்டோஜேக் பல போராட்டங்களை நடத்தியது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நடத்திய பேச்சுவார்த்தையின்படி சில சலுகைகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பு சிறிதும் களையப்படவில்லை. இப்போதும், மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும், மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே | 4,750 வேறுபாடு உள்ளது.
எனவே, இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை மத்திய அரசு ஊதியத்துக்கு இணையாக உயர்த்தும் வரை போராட்டம் தொடரும். எதிர்காலப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்ய வட்டார பொறுப்பாளர்களைக் கொண்ட பேரவைக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்படவுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...